பொது செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

குளித்தலை: கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை பாசன வாய்க்காலில், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி, பொதுப் பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


குளித்தலை அடுத்த, மாயனூர் கதவணையில் இருந்து, தென்கரைபாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு விவசாயிகள், நேற்று முன்தினம் இரவு குளித்தலை ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வந்தனர். அங்கு, தென்கரை மற்றும் மேட்டு வாய்க்காலில் கருகும் பயிர்களை காப்பாற்ற, தண்ணீர் விடக்கோரி சமூக இடைவெளிவிட்டு, அலுவலகம் முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், கல்லணை சென்றடைந்து விட்டது அருகிலுள்ள வாய்க்கால்களுக்கு, தண்ணீர் திறந்து விடவில்லை என, ஒரு வாரத்திற்கு முன்பே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால்தான் அலுவலகம் வந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பொதுப் பணித்துறை துணை பொறியாளர் கொழுஞ்சிநாதன்,' வரும், 26 மாலை மாயனூர் கதவணையிலிருந்து, தென்கரை கட்டளை மேட்டு வாய்க்கால்களுக்கு, தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X