பொது செய்தி

தமிழ்நாடு

கடன் திட்டத்தை முறையாக பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கரூர்: ''மத்திய அரசின், அவசர கால கடன் உத்தரவாத திட்டங்களை, தொழில் நிறுவனங்கள் முறையாக பயன்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர் அன்பழகன் பேசினார். கரூர், கலெக்டர் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலதன கடன் மற்றும் கடன் பங்கு தொகை வழங்கும் திட்டம் குறித்த விளக்கக்கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில், பிணையில்லாமல், 20 சதவீதம் கூடுதல் மூலதன கடன், நலிவடைந்த நிறுவனங்களுக்கான கடன் ஆகிய அவசர கால கடன் உத்திரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இயந்திரமயமாக்குதலை அடிப்படையாக கொண்ட, நான்காம் தலைமுறை தொழில் புரட்சியினால், பல வழிகளில் தொழில் நிறுவனங்களின் செலவு குறைந்து, செயல் திறன் அதிகரித்தல், மதிப்பு கூட்டுதல் ஆகிய நன்மைகள் ஏற்படும். இந்த இக்கட்டான சூழலிலும், மத்திய அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை, அனைத்து நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர் கிரீசன், முன்னோடி வங்கி அலுவலர் ராஜேஷ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாளர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X