பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிய வலியுறுத்தல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டவுன் பஞ்., பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும், பொதுமக்கள் வந்து செல்லும் போது, அவர்கள் கை கழுவுவதற்கு ஏதுவாக, தேவையான அளவு தண்ணீர், சோப்பு கரைசல் அல்லது திரவ கரைசல், சானிடைசர் வைக்கப்படவேண்டும். கடைகளுக்குள் நுழைவதற்கு முன்பும், வெளியில் செல்லும் முன்பும் கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும். கடைகளுக்கு செல்பவர்களும், வணிகர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது. பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வெளி மாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து யாராவது வந்திருந்தால், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, தங்களை பரிசோதித்து கொண்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளப்படவேண்டும். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X