பொது செய்தி

தமிழ்நாடு

புதர்மண்டியுள்ள புகளூர் வாய்க்கால்: தூர் வார விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கரூர்: பல ஆண்டுகளாக, புகளூர் பாசன வாய்க்காலை தூர் வார வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கரூர்-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் பகுதியில், காவிரியாற்றில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் அருகே, புகளூர் பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த, வாய்க்கால் மூலம், 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை கடந்து செல்லும் தண்ணீர், காவிரியாற்றில் மீண்டும் கலக்கிறது. அதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், தவிட்டுபாளையம், புகளூர் உள்ளிட்ட காவிரியாற்று பகுதிகளில், பல ஆண்டுகளாக மணல் அள்ளப்பட்டதால், வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் பகுதிகள் கீழே இறங்கி விட்டது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் செல்வது இல்லை. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்கு கடந்த, 12 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், வாய்க்கால் பகுதியில் மணல் எடுத்ததன் விளைவாக, கீழே சென்று விட்டதால், தண்ணீர் செல்லவில்லை. மேலும், பல ஆண்டுகளாக புகளூர் வாய்க்கால் தூர் வாரப்படவில்லை. இதனால், வாய்க்கால் பகுதி முழுவதும், புதர்மண்டி கிடக்கிறது. விரைவில் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து, கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அப்போது, புதர்மண்டி உள்ள புகளூர் வாய்க்காலில், தண்ணீர் செல்லும் நிலை ஏற்படும். எனவே, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், புதர்மண்டி இருக்கும் புகளூர் பாசன வாய்க்காலை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வார வேண்டும் என, விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X