கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிய அரசு: ராகுல்| Modi govt has unlocked corona pandemic, petrol-diesel prices: Rahul Gandhi | Dinamalar

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிய அரசு: ராகுல்

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (31)
Share
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலையும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வையும் மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழலில் முன்னாள் காங்., தலைவரும், தற்போதைய எம்.பி.,யுமான ராகுல், கொரோனா பரவல், ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என பலவற்றை குறிப்பிட்டு மத்திய அரசை விமர்சித்து
Rahul, Modi Govt, Unlocked, Covid-19 lockdown, Epidemic, Petrol, Diesel, Rates, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, ராகுல், கொரோனா, பரவல், பெட்ரோல், டீசல், கட்டுப்படுத்த, தவறியது, மோடி, அரசு

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலையும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வையும் மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழலில் முன்னாள் காங்., தலைவரும், தற்போதைய எம்.பி.,யுமான ராகுல், கொரோனா பரவல், ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என பலவற்றை குறிப்பிட்டு மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அந்த வகையில், இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பொன்மொழியை குறிப்பிட்டு டுவிட்டரில் ராகுல் பதிவிடுகையில், ‛ஊரடங்கினால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக வீழ்ச்சி அடைந்தது. அறியாமையைவிட அகங்காரம் மிகவும் ஆபத்தானது,' எனத் தெரிவித்திருந்தார்.


latest tamil news


இதற்கிடையே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உச்ச நிலையை எட்டி வரும் அதே நேரத்தில், பெட்ரோல் - டீசல் விலையும் கடந்த 7 ம் தேதி முதல் தொடர்ந்து 17 நாட்களாக உயர்ந்து வருகிறது. 17 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.49 பைசாவும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் வரைபடத்தை வெளியிட்டு ராகுல் பதிவிட்டுள்ளதாவது: மத்தியில் ஆளும் மோடி அரசு, கொரோனா வைரஸ் பரவலையும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வையும் கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஊரடங்குக்கு பின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டும் நாள்தோறும் உயரவில்லை. பெட்ரோல் - டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X