மகளைக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த கொடூர தாய்: திருப்பூரில் அதிர்ச்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளைக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த கொடூர தாய்: திருப்பூரில் அதிர்ச்சி

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (28)
Share
திருப்பூர், தாயார், கொலை, மகள்,கைது, டிஎன்ஏ பரிசோதனை,

திருப்பூர்: மகளை கொலை செய்து, வீட்டிற்குள்ளேயே புதைத்து, சிமென்ட் கொண்டு பூசி கொலையை மறைத்த தாயாரை போலீசார் கைது செய்தனர். புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்த அதிகாரிகள், எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர், வீரபாண்டியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி, 28. கடந்த, 2014ல், கணவரை பிரிந்து குழந்தைகளோடு, வேலன் நகர், 2வது வீதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். 2014 ஜூன் 18ல், எஸ்தர் பேபி மாயமானதாக, அவரின் தந்தை அப்துல்காசர் போலீசில் புகார் அளித்தார்.


latest tamil news



வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், எஸ்தர் பேபி கொலை செய்யப்பட்டு வீட்டு முன், புதைக்கப்பட்டது, கடந்த மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக, அவரின் தாய் சகாய ராணி, 50, தாய் மாமா சேவியர் அருண், 40 மற்றும் சகாய ராணியின், கள்ளக்காதலன் பாக்யராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


டி.என்.ஏ., பரிசோதனை


ஆறு ஆண்டுகளுக்கு பின், திருப்பூர் தெற்கு தாசில்தார் சுந்தரம், தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலையில், சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அதில், கிடைத்த எலும்புகளை, மருத்துவ குழுவினர், டி.என்.ஏ., பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.


latest tamil news




போலீசார் கூறியதாவது:திருப்பூர் அருகே மங்கலத்தில், தங்கியிருந்த போது, சகாயராணிக்கு, பாக்யராஜ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் எஸ்தர் பேபிக்கு தெரிந்ததால், தாயை, கண்டித்தார். இதனால், சகாயமேரி, தனது தம்பி சேவியர் அருண், பாக்யராஜ் ஆகியோருடன் சேர்ந்து, 2014 ஜூன் 14ல், எஸ்தர்பேபியை கத்தியால் குத்தி கொலை செய்து வீட்டுக்கு முன்னுள்ள இடத்திலேயே குழி தோண்டி புதைத்து, சிமென்ட் பூசி மறைத்தனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


latest tamil news





சிக்கியது எப்படி?



கடந்த மார்ச்சில், வேறொரு கொலை வழக்கு தொடர்பாக, துாத்துக்குடியை சேர்ந்த சேவியர் அருணை, சென்னை, பள்ளிக்கரணை போலீசார் பிடித்தனர். அப்போது, சகாயராணியுடன் சேர்ந்து, எஸ்தர்பேபியை கொலை செய்து புதைத்த விவகாரம் தெரிந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X