சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை, வால்பாறை, எம்எல்ஏ, ஆறுமுகம், கொரோனா,

கோவை: வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இவர் மற்றும் கோவை ஜில்லா மில் தொழிலாளர்கள் சங்க பொருளாளர் சிவசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் ஜே.ஜேம்ஸ் ஆகியோருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுமுகம், மாநகராட்சி கமிஷனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றுள்ளார். தற்போது கொரோனா உறுதியாகியுள்ளதால், அவர் கான்பரன்ஸ் ஹாலில் அமர்ந்து தனது பணியை மேற்கொண்டு வருகிறார். அவரது அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைபடுத்தும் பணி நடந்து வருகிறது.


latest tamil news





பெண் போலீசுக்கு கொரோனா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர், போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், 23 வயது பெண் போலீசுக்கு இன்று (ஜூன் 24) காலை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பெண் போலீசுடன் வேலை செய்த போலீசார், அவர் தங்கியிருந்த குடியிருப்பில் உள்ளவர்கள் என, 40 பேருக்கு, கொரோனா தொற்றை கண்டறிய மாதிரி சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், பெண் போலீசின் 'காண்டாக்ட், டிராவர் ஹிஸ்டரி' சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூன்-202019:12:27 IST Report Abuse
Chandramoulli உண்டி குலுக்கிகளினால் எப்போதும் எல்லோருக்கும் தொல்லை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X