பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்; கேரள அமைச்சருக்கு ஐ.நா., கவுரவம்

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
UN, Kerala, Health Minister, Covid-19, Public Service Day, United Nation, honours, Kerala Health Minister, KK Shailaja, Covid-19 crisis, kerala, கேரளா, ஐநா, சுகாதாரஅமைச்சர்,

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் திறம்பட பணியாற்றியதற்காக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவை தங்கள் குழு விவாதத்தில் இணைத்துக் கொண்டு ஐ.நா., சபை கவுரவித்தது.

இந்தியாவில் முதன்முதலில் ஜனவரி மாதத்தில் கேரளாவில் தான் கொரோனா வைரஸ் தொற்று பதிவானது. ஆரம்பக் கட்டத்திலேயே தீவிர பரிசோதனை, கொரோனா தொற்றுள்ளவர்களுடன் பழகியவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை உத்தியாகவே கடைப்பிடித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நிபா வைரஸ் கிளம்பிய போது ஆற்றிய களப்பணி சுகாதார அமைச்சர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா காலத்திலும் கைக்கொடுத்தது.


latest tamil news


தற்போது கேரளாவில் 3,503 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் 141 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், தனது மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவை 2020 உலக பொது சேவை தினத்தில் (ஜூன் 23) ஐ.நா., சபை குழு விவாதத்தில் பங்கேற்க அழைத்தனர். ஐ.நா பொதுச் செயலர் மற்றும் உலக சுகாதார நிறுவன இயக்குனர் அடங்கிய குழு விவாதத்தில் பங்கேற்றது கவுரமாக இருந்ததாக கே.கே.ஷைலஜா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
25-ஜூன்-202018:28:09 IST Report Abuse
Ranjith Rajan கேரளாவில் ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நிறைய இடைவெளி இருக்கும். அங்கே இருப்பவர்களுக்கு பயம் அதிகம். ஏற்கனவே நிப்பா வைரஸ், பறவை காய்ச்சல் போன்றவற்றை பார்த்தவர்கள். விழிப்புணர்வு அதிகம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூன்-202021:42:01 IST Report Abuse
தல புராணம் டில்லியில் நம்பர் 7, லோக் கல்யாண் மார்க் வீட்டில் ஒரே புகைச்சல்..
Rate this:
Rajas - chennai,இந்தியா
24-ஜூன்-202022:41:24 IST Report Abuse
Rajasநாளை வர போகிறது ஒரு சர்வே. அகில உலகில் அதிக மக்கள் தொகை இருந்தும் பாதிப்பு குறைவானதற்கு காரணம் எங்கள் திட்டமிட்ட நடவடிக்கைகள் தான்....
Rate this:
Cancel
Barathan - chennai,இந்தியா
24-ஜூன்-202021:17:28 IST Report Abuse
Barathan பேசாமல் இவர்களை இந்திய அளவில் நோய் தொற்று தடுப்பு மந்திரி ஆக்கினால் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X