பொது செய்தி

இந்தியா

டில்லியில் பெட்ரோலை பின்னுக்குத் தள்ளி டீசல் ‛டாப்'

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் டில்லியில் பெட்ரோலை விட டீசலின் விலை உயர்வாக மாறியுள்ளது.சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் விலை நிலவரம் மற்றும் போரெக்ஸ் ரேட் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வேட் (VAT) வரியை பொறுத்து
Delhi, Petrol, Diesel, Price, Higher, Costlier, டில்லி, பெட்ரோல், டீசல், விலை, உயர்வு, அதிகம்

புதுடில்லி: தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் டில்லியில் பெட்ரோலை விட டீசலின் விலை உயர்வாக மாறியுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் விலை நிலவரம் மற்றும் போரெக்ஸ் ரேட் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வேட் (VAT) வரியை பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலைகள் மாறுபடும்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கின் போது சுமார் 12 வாரங்களுக்கும் அதிகமான நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தன.


latest tamil news


ஊரடங்கில் போடப்பட்ட கட்டுப்பாடுகள் அடுத்தடுத்த தளர்த்தப்பட்டு வருவதால், எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் விலை உயர்வு தொடங்கியது. அந்த வகையில் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது, இன்று (ஜூன் 24), டீசலுக்கான விலை மட்டும் உயர்த்தப்பட்டது.
இதனால், டில்லியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 79.76 ரூபாய்க்கும். ஒரு லிட்டர் டீசல் 79.88 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதன்மூலம் டில்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்வாக மாறியுள்ளது. கோல்கட்டா, மும்பை, சென்னை உள்ளிட்ட மற்ற முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலையே அதிகமாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami Sam - chidambaram ,இந்தியா
24-ஜூன்-202019:17:00 IST Report Abuse
Sami Sam டீசல் பயன்பாட்டை குறைக்க உதவும் விலையேற்றம் காலப்போக்கில் டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாடு குறையுமானால் மாற்று சக்தி பெரு உருவெடுக்குமானால் பொருளாதாரத்திலும் நம் நாடு முன்னேற்றம் காணும்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-ஜூன்-202019:12:38 IST Report Abuse
மலரின் மகள் ஏறத்தாழ இரண்டிற்கும் இடைவெளி முப்பது ரூபாய்க்கு சற்று கூடுதலாக இருந்தது. எட்டாண்டுகளுக்கு முன்னர். கடந்த ஆறு ஆண்டுகளாக தான் இந்த இடைவெளியை குறைத்து இப்போது டில்லியில் டீசல் விலை பெட்ரோலை விட கூடுதலாகி விட்டது. டீசல் வகை கார்கள் பதினைந்து சதவீதம் பெட்ரோல் வகை கார்களை விட அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டது அதனால் தான். இப்போது டீசல் வகை கார்கள் விற்பனை முற்றிலும் குறைந்தே விட்டது. விற்பதே இல்லை என்கிறார்கள். டீசல் ஆட்டோக்கள் கதி இனி மற்ற மாநிலங்களில் பாவம் தான். ஆட்டோ மொபைல் துறை கடந்த ஆண்டே மிகவும் மூச்சு திணறி கொண்டு இருந்தது, இப்போது ஐ சி யு விற்கு சென்று விட்டது. எரிபொருட்கள் விலையை அரசு நிர்ணயம் செய்தது மாறி அதை விற்பவர்களுக்கே தந்தார்கள். மாதத்திற்கு ஒரு முறை விலை நிர்ணயம் என்று கூறி அதன் பிறகு பரிச்சாத்த முறையில் பாண்டிச்சேரியில் மாதமிருமுறை என்றும் அதன் பிறகு வாரமொருமுறை என்றும் பின்னர் தினமும் சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றுவதாக கூறினார்கல். இப்போது சர்வதேச விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கின்ற பொது இந்தியாவில் மட்டுமே தான் விலை அதிக விலைக்கு விற்கிறது. உலக அரங்கில் கச்ச எண்ணெய்யின் விலை எதிர்மறையாக பூஜ்ஜியத்தை விட குறைந்து எண்ணெயும் தந்து அதை வாங்குபவர்களுக்கு பணமும் தந்த காலத்தில் கூட நமது நாட்டில் விலை கூடி கொண்டே போகிறது. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப கூட்டவும் குறைக்கவும் செய்வோம் என்று சொன்னார்களே. இப்போது ஏன் அது நடக்கவில்லை. இது முழுவதும் சந்தர்ப்பவாதம் என்பதா? அல்லது அந்த பெரிய முதலாளி கம்பனி கூறுவது போல ப்ரோக்கேன் ப்ரோமிஸ் என்பதா அல்லது முழுதும் ஏமாற்று வேலை என்பதா? எது எப்படியோ ஒரு லிட்டர் டீசல் வாங்கினால் ஒரு லிட்டர் கொள்ளளவில் தருகிறார்கள். ஒரு லிட்டர் வாங்கினால் அதில் செய் கூலி சேதாரம் ஆவியாதல் போன்றவற்றை கழித்து வெறும் தொண்ணூறு மில்லி தான் தருவோம் என்று சொல்லாமல். அதுவரையில் தாராளமாக பாராட்டலாம் அவர்களை.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
25-ஜூன்-202006:13:49 IST Report Abuse
 Muruga Velkoronaavaal porulaadhaara paadhippu ..vari kidaippadhillai ..mathiya arasu uzhiyargalukku muzhu sambalam ...penshan thara vendum ...podhuvaaga deesal refining cost is more than petrol....
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202018:40:00 IST Report Abuse
babu புதிய இந்தியாவின் புதிய சாதனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X