தமிழகத்தில் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்| Crucial decisions taken at Tamil Nadu CM's meet with Collectors | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (11)
Share
தமிழகம், மாவட்டம், இபாஸ், போக்குவரத்து,  முதல்வர் இபிஎஸ், Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, tn cm, palaniswami

சென்னை : நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலங்களுக்குள் பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். மேலும், நாளை(ஜூன் 25) மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ - பாஸ் அவசியம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டம் தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது:

*கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

*கொரோனாவை தடுப்பது தொடர்பாக பிரதமருடன் 6 முறையும், கலெக்டர்களுடன் 7 முறையும் ஆலோசனை நடத்தப்பட்டது.

*மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

*சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

*சென்னையில் 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

*சென்னையில் கொரோனாவை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏழை மக்களுக்கு ரூ.1,000 நிதியுதவி, மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.

*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*சென்னை மக்கள், தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

*நோய் அறிகுறி உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும். இருக்கும் இடத்திற்கே வந்து நடமாடும் வாகனங்கள் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

*நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

*ஒரே மண்டலத்தில் இருந்தாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

*நாளை முதல் மாவட்டத்திற்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும்.

*மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இனிமேல் இ-பாஸ் பெற வேண்டும்.

*மாவட்டங்கள் இடையே கார் டூவிலர் தனியார் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது


latest tamil news*அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான அளவு டாக்டர்கள், நர்சுகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

*மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு பகுதியில் அரிசி ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஆயிரம் ரொக்கம் நிவாரணமாக வழங்கப்படும்.

*காய்கறி. இறைச்சி கடைகளுக்கு செல்லும் போது தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும்

*கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

* கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X