சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5 பணியாளருக்கு கொரோனா தாராபுரம் நகராட்சி ஆபீசுக்கு 'சீல்'

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 5 பணியாளருக்கு கொரோனா  தாராபுரம் நகராட்சி ஆபீசுக்கு 'சீல்'

கொரோனா தொற்று பரவியதால், தாராபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், நேற்று ஐந்து நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். இதனால், நகராட்சி அலுவலகத்துக்கு, நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.
தாராபுரம் நகராட்சி அலுவலக பெண் பணியாளர் ஒருவரின் கணவர், சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளார். அதன்மூலமாக, கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் தொற்று பரவியது. நகராட்சி அலுவலக பணியாளர் மற்றும் தொடர்புடைய, 50 நபர்களுக்கு பரிசோதனை நடந்தது.
அதில், பணியாளர் மூன்று பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே அலுவலகத்தில், நான்கு நபருக்கு தொற்று பரவியுள்ளது.
கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,'சென்னை சென்று வந்த ஒரு நபரால், தாராபுரம் தாலுகாவில், ஐந்து பேருக்கு தொற்று பரவியுள்ளது. அடுத்த, 14 நாட்களுக்கு, மாற்று நிர்வாக ஏற்பாடுகளை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்,' என்றனர்.கடந்த சில நாட்களாக, திருப்பூர் நகரப்பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவசரகால நடவடிக்கையாக, கொரோனா தடுப்பு பணியை முடுக்கிவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X