லத்தீன் அமெரிக்காவில் கொரோனா பலி ஒரு லட்சத்தை தாண்டியது

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
LatinAmerica, Caribbean, DeathToll, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், கொரோனா, வைரஸ், தாக்கம், corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, latin america, washington,

வாஷிங்டன்: லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் மண்டலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

முன்னர் கொரோனா வைரஸின் மையமாக அமெரிக்கா விளங்கிய நிலையில், தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் மண்டலங்கள் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ளன. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த புள்ளிவிவரங்களின் படி, இங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதில் பாதிக்கும் அதிகமான உயிரிழப்புகள் பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது.


latest tamil news


பிரேசிலுக்கு அடுத்தப்படியாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோவில் 23,300-க்கும் மேற்பட்ட இறப்புகள் உள்ளன. உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் கண்டு அலறிக்கொண்டிருந்த நிலையில் இந்த இரு நாடுகளும் பொருளாதார காரணங்களுக்காக கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளையோ, நாடு தழுவிய கட்டுப்பாடுகளையோ அமல்படுத்தவில்லை என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


latest tamil news


பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன, அங்கு முறையே 8,404 மற்றும் 4,505 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் விட லத்தீன் அமெரிக்கா இப்போது தொடர்ந்து தொற்று பாதிப்பை ஆயிரக்கணக்கில் தெரிவிக்கிறது. மேலும் சில நாடுகள் தொற்றுநோயின் உச்சநிலை இன்னும் சில வாரங்களில் எட்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
24-ஜூன்-202022:59:04 IST Report Abuse
Vena Suna பிரதமர் மோடி சரியான முறையில் இங்கு ஊரடங்கை கொண்டு வந்ததால்..பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப் பட்டன என்று நடு நிலையாளர்கள் பேசுகின்றனர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X