பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 67,468 ஆக உயர்வு

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
CoronaVirus, Corona Cases, Tamil nadu, Discharge, TN Corona Updates, TN Health, TN Fights Corona, Corona, TN Govt, Covid-19, Positive Cases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 24) ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆகவும், பலி எண்ணிக்கை 866 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 91 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 67,468 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 88 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,079 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 9,76,431 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.


latest tamil news


இன்று 25 பேர் அரசு மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் என மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 37,763 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,836 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manickam jayaprakkash - Coimbatore,இந்தியா
25-ஜூன்-202013:22:54 IST Report Abuse
manickam jayaprakkash Previously TN govt told Central govt was appreciating TN govt on handling Corona.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
25-ஜூன்-202009:14:57 IST Report Abuse
Chandramoulli ஊரடங்கை முழுமையாக மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் கட்டுப்படுத்த முடியும். மக்கள் எல்லோரும் இந்த நோயின் வீரியத்தை புரிந்து கொள்ளவில்லை . சர்வ சாதரணமாக வீதியில் வலம் வருகின்றனர் . அரசு ஓரளவுக்கு தான் எடுத்து சொல்லும் .
Rate this:
Cancel
G.Loganathan - Coimbatore,இந்தியா
25-ஜூன்-202002:45:09 IST Report Abuse
G.Loganathan வளைகுடா நாடுகளில் பல சிரமங்களுக்கிடையில் எப்படியாவது ஊருக்கு சென்றால் போதும் என்று வரும் பயனிகளிடம் திருச்சி யில் கொள்ளை நடக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இருக்கிறது. ஏதொ தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாதது போலவும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மட்டும் தான் கொரோனா தொற்று பரவ காரணம் போலவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி ஹோட்டல் வாடகை, கொரோனா தொற்று ஆய்வு க்கு பணம் என்று கொள்ளை நடக்கிறது. சம்பளம் இன்றி, பல நாட்கள் பசியாற சாப்பிடாமல் தாய்நாடு வரும் தமிழர்களை ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறார்கள்?. தினமலர் இதுபற்றி ஆய்ந்து சரியான நடவடிக்கைக்கு உதவிட கோருகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X