சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் மையம்


பிர்லா கோளரங்கம் இந்தியாவில் சென்னை, ஐதராபாத் மற்றும் கோல்கட்டா ஆகிய இடங்களில் உள்ளது. கோல்கட்டா - பிர்லா கோளரங்கம், ஆசியாவின் மிகப்
பெரிய மியூசியங்களுள் ஒன்று. இது 1962ல் துவக்கப்பட்டது. இங்கு சூரிய குடும்பம், விண்மீன்கள், நட்சத்திரங்கள், விண்வெளி, கோள்கள் போன்ற வானியல் தகவல்கள் ஒலி, ஒளி வசதிகளுடன் பல மொழிகளிலும் அறிந்து கொள்ளலாம். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம் 1988 மே 11ல் தொடங்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு நாளும் பல மொழிகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


தகவல் சுரங்கம்

எத்தனை துணை பிரதமர்


இந்தியாவில் துணை பிரதமர் பதவி, அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டதில்லை. நிர்வாக வசதிக்காக இப்பதவி உருவாக்கப்படுகிறது. வழக்கமாக உள்துறை அல்லது நிதி அமைச்சராக இருப்பவர்கள், துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஏழு பேர் துணை பிரதமர் பதவி வகித்துள்ளனர். நேரு அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல், முதல் துணை பிரதமரானார். பின் மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜெகஜீவ ராம், யஸ்வந்த்ராவ் சவாண், தேவிலால் மற்றும் அத்வானி இப்பதவியை வகித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X