கேரளாவில் மேலும் 152 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவனந்தபுரம் : கொரோனா பாதிப்பு கேரளத்தில் சற்று அதிகரித்து மேலும் 152 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. கேரளாவில் நோய் பாதிப்புகள் மற்ற சில மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. இதற்கு அம்மாநில அரசின் சிறந்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதற்கு ஒத்துழைப்பு அளித்த மக்களும் தான் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தில் புதிதாக இன்று 152 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 144 பேர் வரை வெளி மாநிலம் மற்றும் பிற நாடுகளில் இருந்து கேரளத்திற்கு திரும்பியவர்கள். இதனால் கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,603 ஆக உயர்ந்தது.


latest tamil news



மாநிலத்தில் புதிதாக ஒருவர் பலியானார். கேரளாவில் தொற்று காரணமாக 22 பேர் பலியாகினர். மாநிலத்தின் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,809 ஆக உள்ளது. இவ்வாறு கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
24-ஜூன்-202020:13:58 IST Report Abuse
Balasubramanian Ramanathan மலையாளிகளுக்கு இந்த நிலைமையா, ஆண்டவரே. தமிழ் நெஞ்சங்களின் துடிப்புகளை கேட்ப்பீரோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X