73 ஆண்டுகால பிரிவினைக்கு பிறகு இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோயில்!

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்துக்கள் கணிசமாக இருந்த போதிலும், பிரிவினை நடந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதல் இந்து கோயிலை தலைநகர் இஸ்லாமாபாத்தில் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்து மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு அவர்கள் வழிபடுவதற்கு என்று முறையாக இந்து கோயில்களோ, இறுதி சடங்குகளை
pakistan, capital, islamabad, hindu temple, partition, india, pak, பாக்., தலைநகர், இஸ்லாமாபாத், இந்துக் கோவில்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்துக்கள் கணிசமாக இருந்த போதிலும், பிரிவினை நடந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதல் இந்து கோயிலை தலைநகர் இஸ்லாமாபாத்தில் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்து மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு அவர்கள் வழிபடுவதற்கு என்று முறையாக இந்து கோயில்களோ, இறுதி சடங்குகளை நடத்த தகன மேடைகளோ இதுவரை இல்லை. தங்களுக்கென ஒரு கோயிலை அமைத்துக்கொள்ள இந்து சமுதாய மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணைய உத்தரவுப் படி 2017-ம் ஆண்டு கோயில் கட்டிக்கொள்ள 2000 சதுர அடி நிலம் இஸ்லாமாபாத்தில் ஒதுக்கப்பட்டது.


latest tamil news



ஆனாலும் தள வரைப்படத்துக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற பல்வேறு வழிமுறைகளை தாமதப்படுத்தி வந்தனர். இறுதியாக அனைத்திற்கு ஒப்புதல் பெற்று இஸ்லாமாபாத்தின் எச்-9 செக்டார் பகுதியில் இன்று (ஜூன் 24) எளிய முறையில் பூமி பூஜை போடப்பட்டது. மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மல்ஹி இவ்விழாவுக்கு தலைமை தாங்கினார் கோயிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என்று பெயரிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202004:32:39 IST Report Abuse
Dr.C.S.Rangarajan விவேக் ஒரு திரைப்படத்தில் ' யாருமில்லா இடத்தில் (நேரத்தில்) யாருக்காக டி போட்டு கொண்டிருக்கிறார் என டி கடையில் வேலைசெய்பவரை குறிப்படுவதுபோல், இந்துக்கள் இல்லாத ஒரு இடத்தில்/நாட்டில் இந்து கோயில் கட்டுவதில் 'மத சார்பின்மை' தனிப்பட்ட நாட்டின் சொத்தல்ல என நிரூபிக்கும் முயற்சியோ?
Rate this:
Cancel
ராஜா - Chennai,இந்தியா
24-ஜூன்-202023:08:00 IST Report Abuse
ராஜா இந்தியா பாகிஸ்தான் உறவு வேண்டும். பஸ்கிஸ்தானியர்களும், இந்தியர்களும் சேருவதில் தடை இல்லை, பாக்கிஸ்தான் அரசும் இந்திய அரசும் சேருவதிலும் கூட தடை இல்லை. ஆனால் இதில் பாக்கிஸ்தான் ராணுவம் மட்டுமே தடை. அவர்கள் தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஏற்றுமதி செய்துகொண்டு இருக்கிறார்கள். பாகிஸ்தான் சீனவால் வஞ்சிக்கப்படும் நாள் வரும் இந்தியாவை பற்றி அவர்கள் உணர்வதற்கு.அதுவரை இந்தியா காத்துகொண்டு தான் இருக்க வேண்டுமா?
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
24-ஜூன்-202022:37:54 IST Report Abuse
Vaduvooraan ஹும்... பூனை குடியிருக்கிற வீட்டில் எலி பேரன் பேத்திய கூட்டி வந்து வெச்ச கதைதான் ரொம்ப சிம்பிளா அதிக செலவில்லாம கட்டுங்க கோயிலை எப்பவும் எது வேணுமானாலும் நடக்கலாம். முன்னாடியே சொல்லலியே ரத்து கேட்காதீங்க.. அது சரி உங்களை இன்னும் கட்டாயமாக மதம் மாற்றாமல் எப்படி விட்டு வெச்சிருக்காங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X