தமிழ்நாடு

கோவை- திருப்பூர் கொரோனா ரவுண்டப்

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
கோவை- திருப்பூர் கொரோனா ரவுண்டப்



பொள்ளாச்சியில் பெண் போலீசுக்கு கொரோனா: 45 பேருக்கு பரிசோதனை


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், 23 வயது பெண் போலீஸ், காய்ச்சல், சளி காரணமாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். அவருக்கு கொரோனா தொற்றை கண்டறிய சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கொரோனா உறுதியான பெண் போலீஸ், ஸ்டேஷனுக்கு பின்பக்கமுள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். இவருடன் போலீஸ் ஸ்டேஷனில், 15 பேர் பணியாற்றுகின்றனர்.

பெண் போலீசுக்கு சிகிச்சையளித்த டாக்டர், செவிலியர்கள், குடியிருப்பில் உள்ளவர்கள், உடன் வேலை செய்வோர் என, 45 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. அவருடன் பணியாற்றிய போலீசார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.


latest tamil news




திருப்பூர்:


5 பேருக்கு கொரோனா:தாராபுரம் நகராட்சி அலுவலகம் சீல்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பணியாளர் நான்கு பேர் உட்பட, ஐந்து பேருக்கு கொரோனா தொற்று பரவியதால், தாராபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், ஐந்து நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். இதனால், நகராட்சி அலுவலகத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

தாராபுரம் நகராட்சி அலுவலக பெண் பணியாளர் ஒருவரின் கணவர், சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளார். கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் தொற்று பரவியது. நகராட்சி அலுவலக பணியாளர் மற்றும் தொடர்புடைய, 50 நபர்களுக்கு பரிசோதனை நடந்தது.

அதில், பணியாளர் மூன்று பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அதிகாரிகள் கூறுகையில்,'சென்னை சென்று வந்த ஒரு நபரால், தாராபுரம் தாலுகாவில், ஐந்து பேருக்கு தொற்று பரவியுள்ளது என்றார்.


முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட இரண்டு பேருக்கு கொரோனா!


வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆறுமுகம் வால்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போல், டேக்ட் குறுந்தொழில் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சென்றார். அப்போது செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X