பொது செய்தி

இந்தியா

மே.வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கோல்கட்டா: கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே.வங்க சு வரும் ஜூலை 31 வரை ஊடரங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.



latest tamil news




நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஏப்.,14 வரை முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஊடரங்கு ஏப்.,14 முதல் மே., 3 வரையிலும் , மூன்றாம் கட்ட ஊடரங்கு மே 3 முதல் 17 ம் தேதி வரையிலும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 18 முதல் 31 ம் தேதி வரையிலும் பிறப்பிக்கப்பட்டது.


latest tamil news



அதனை தொடர்ந்து ஒரு சில தளர்வுகளுடன் அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கை பிறப்பித்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகள் வரும் 30 ம் தேதி வரையில் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் மே.வங்க மாநில அரசு வரும் ஜூலை 31 வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பால் ஜூலை 31 வரையில் பயணிகள் ரயில், மெட்ரோ ரயில்கள் ஓடாது என மாநில அரசு அறிவித்து உள்ளது.

மாநிலத்தில்14,728 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் தொற்று காரணமாக 580 பேர் பலியாகி உள்ளனர். மே.வங்க மாநில அரசு ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு வரும் ஜூலை 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X