சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கலகலக்கும் கூடாரம்!

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கலகலக்கும் கூடாரம்!

கலகலக்கும் கூடாரம்!

'ஊகூம்... இனி இவரை நம்பி பலனில்லை; ரூட்டை மாற்ற வேண்டியது தான்' என, கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவை பற்றி கிசுகிசுக்கின்றனர், அவரது ஆதரவாளர்கள். கர்நாடக, பா.ஜ.,வில், சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பல தலைவர்கள் இருந்தாலும், எடியூரப்பாவுக்கு தனி செல்வாக்கு உண்டு. மூத்த தலைவர்களாக இருந்தாலும் சரி, இளம் தலைவர்களாக இருந்தாலும் சரி; அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான், இவரது அரசியல் ராஜ தந்திரத்துக்கு எடுத்துக் காட்டு. ஆனால், சமீபகாலமாக, எடியூரப்பாவுக்கு எதிராக கட்சிக்குள் பல கோஷ்டிகள் முளைத்துள்ளன. எடியூரப்பா அசரும் நேரம் பார்த்து, பதவியை பறிக்க, இவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தில், கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு, பா.ஜ., சார்பில் தேர்வு செய்யப்பட, தன் விசுவாசிகள் இருவரது பெயரை பரிந்துரை செய்திருந்தார் எடியூரப்பா.
கட்சி மேலிடம், இவரது பரிந்துரையை பரிசீலிக்காமல், அவர்களாகவே இருவரை தேர்வு செய்து அறிவித்து விட்டது. இதையடுத்து, எடியூரப்பாவின் ஆதரவுக் கூட்டம், கலகலக்க துவங்கியுள்ளது. 'இவருக்கு, கட்சிக்குள் எந்த அதிகாரமும் இல்லை. இவருக்கு, ஜால்ரா அடிப்பதில் பயனும் இல்லை' என, எடியூரப்பாவின் விசுவாசிகள் ஒவ்வொருவராக, மாற்று முகாமுக்கு தாவ திட்டமிட்டு வருகின்றனர்.
தன் கூடாரம் கலகலப்பதை, கவலையுடன் வேடிக்கை பார்க்கிறார் எடியூரப்பா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
25-ஜூன்-202002:53:42 IST Report Abuse
Subbanarasu Divakaran ஆங்கிலத்தில் பாலிடிக்ஸ் ஐஸ் தி லாஸ்ட் ரிசார்ட் ப சவுண்டரேல்ஸ் அதாவது அரசியல் போக்கிரிப்பயல்களுக்கு கடைசி அணுகும் ஸ்தலம். எவ்வளவு உண்மை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X