பொது செய்தி

இந்தியா

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
andhra, ap, corona, positive cases, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, ஆந்திரா, கொரோனா, பாதிப்பு, 10,000, கடந்தது

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 9 ஆயிரத்து 834 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 497 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,331 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 4,779 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர், 5,423 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு எண்ணிக்கை உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X