டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
 'டவுட்' தனபாலு

பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தினமும் ஒரு அறிக்கையை, ஆள் வைத்து விடுத்து, தானும் தமிழக அரசியலில் இருக்கிறேன் என்று காட்ட, படாதபாடு படுகிறார். கொரோனா காலத்தில், மலிவான அரசியல் நடத்தி, தன் இருப்பையும், தமிழக மக்கள் மீது, அவருக்கு இருக்கும் வெறுப்பையும் காட்டி வருகிறார்.

'டவுட்' தனபாலு: இதே கருத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்களில் சிலர் கூறியுள்ளனர். அப்போதும், ஸ்டாலினிடம் இருந்து எந்த மாற்றமும் வராதததால், அதிரடி பேச்சுக்கு சொந்தக்காரரான உங்களை, அ.தி.மு.க., களம் இறக்கி விட்டுள்ளதோ என்ற, 'டவுட்'



த.மா.கா., தலைவர், வாசன்
: தேசம் இன்று, இரண்டு சோதனைகளை எதிர்க்கொண்டுள்ளது. ஒருபுறம் கொரோனா என்ற கொடிய தொற்று நோய் தாக்கம். மறுபுறம் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், எல்லை மீறுதல்களும், மறைந்திருந்து தாக்குதலும் நடக்கிறது. இந்த இரண்டு சவால்களையும், மத்திய அரசு சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும் திறமையாகவும் சமாளித்து வருகிறது.
'டவுட்' தனபாலு: நாட்டிலேயே, பா.ஜ., தவிர்த்து, பிற கட்சித் தலைவர்களில் நீங்கள் மட்டும் தான், மத்திய அரசு சாதுர்யமாக செயல்படுகிறது என கூறியுள்ளீர்கள். இதற்காக உங்களுக்கு, மத்திய அமைச்சரவையில் விரைவில் இடம் அளிக்கப்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்:
கொரோனா காலத்திற்கு முன், தமிழகத்தில், மின் நுகர்வோர் எவ்வளவு தொகையை கட்டணமாக செலுத்தியிருந்தனரோ, அதே தொகையை, கொரோனா காலம் முடியும் வரை வசூலிக்க வேண்டும். எவ்வளவு கூடுதலாக உள்ளதோ, அத்தொகையை, தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

'டவுட்' தனபாலு: இதைத் தான், நெல்லை, குமரி, துாத்துக்குடி மாவட்ட பகுதிகளில், 'தென்காசி வழக்கு' என்பர்; 'இல்லாத ஊருக்கு வழி சொல்வது' என்பர். சீனா நம்மை எதிர்க்கும் இந்த நேரத்தில், அவர்களுடைய கம்யூனிச சித்தாந்தத்தை நீங்கள் கடைப் பிடிப்பது, பல, 'டவுட்'டுகளை ஏற்படுத்துது!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X