சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'எதிர்க்கட்சி என்பதற்காக, எதை வேண்டுமானாலும் கூறுவதா...' என, நெத்தியடியாகக் கேட்கத் துாண்டும் வகையில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை: எல்லையில் அத்துமீறல் நடக்கவில்லை எனக் கூறிய பிரதமர் மோடி தான், ராணுவத்தை அவமதித்துள்ளார். எனவே, ராணுவம் பற்றி பேச, பா.ஜ.,வுக்கு அருகதை இல்லை.
'ஊரடங்கு பல மாவட்டங்களில் உள்ளனவே...' என, நினைவுபடுத்தத் துாண்டும் வகையில், புதிய தமிழகம் கட்சி பிரமுகர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: உடுமலை சங்கர் படுகொலை வழக்கை சரியாக விசாரிக்காத, தவறான தீர்ப்பு வழங்க காரணமாக இருந்த, தமிழக அரசை கண்டித்து, எங்கள் கட்சி சார்பில், இம்மாத இறுதியில், அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.



'நியாயமான கோரிக்கை தான்; இ.பி.எஸ்., அரசு ஏற்குமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க, மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை:
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு பின் இறந்திருக்கின்றனர். காவல் துறையினர் தாக்கியதில் தான் இறந்துள்ளனர் என கூறப்படுகிறது. இதை முறையாக விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



'இதுவரை தனிநபர்களுக்குத் தான் கேட்டு வந்தனர்; இப்போது, சங்கம் சங்கமாக கேட்கத் துவங்கி விட்டனர் போல இருக்கிறதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் காமராஜ் பாண்டியன் அறிக்கை:
மாநிலத்தில், 4,500 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. பணியாளர் நலன் கருதி, சங்கங்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் கடனை, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.



'காந்தி காலத்திலிருந்து இந்த கோரிக்கை உள்ளது; அரசுகள் தான், கேட்க மாட்டேன் என்கின்றன. நீங்கள் சொல்லியா கேட்கப் போகின்றன...' என, விரக்தியை வெளிப்படுத்தும் வகையில், நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன் அறிக்கை:
ஊரடங்கு காலத்தில், மற்ற கடைகள் மூடி இருக்கும் நேரத்தில், மது விற்பனை படுஜோராக நடக்கிறது. அரசு உடனடியாக, அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும். இந்திய கலாசாரத்தையே சீரழிக்கும் மதுபானங்களை, மத்திய - மாநில அரசுகள் நேரடியாக விற்பது, நியாயமான செயல் கிடையாது.



'நியாயம் தானே... முழு அடைப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு, கொஞ்சமாவது இந்த தொகை உதவுமே...' என, கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
கொரோனா பரவலை தடுக்க, மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வழங்குவதைப் போல, 1,000 ரூபாய், நிவாரண நிதி வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
25-ஜூன்-202015:34:14 IST Report Abuse
l vijayaraghavan பிரதமர அடிக்கடி அர்ச்சனை செய்து வருமகிறார்கள் சில மாபியாக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X