சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வெளிநாட்டில் சிக்கிய விஜயகாந்த் மகன்!

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 வெளிநாட்டில் சிக்கிய விஜயகாந்த் மகன்!

வெளிநாட்டில் சிக்கிய விஜயகாந்த் மகன்!
''மாணவர்களைக் கூப்பிட்டு, தேர்வு எழுத வச்சிருக்காங்க...'' என, அன்வர்பாய் வீட்டு ஏலக்காய் டீயை ருசித்தபடியே, விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''பள்ளிக் கூடங்களை எல்லாம், மூணு மாசமா மூடி வச்சிருக்காவளே... எந்த ஊருல, யாருவே பள்ளியை திறந்தா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''பத்தாம் வகுப்பு மாணவர்கள் எல்லாருக்கும், 'ஆல் பாஸ்' போட்டு விட்டாங்கல்ல... அவங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க, காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை ஒப்படைக்க, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு போட்டாங்க...
''பெரும்பாலான பள்ளிகள்ல, அந்த விடைத்தாள்களை, குப்பையில போட்டுட்டாங்க... திருச்சி, இனாம்குளத்துார், சீராத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளிகள்ல, மாணவர்களை வரவழைச்சு, குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வாங்கி அனுப்பி வச்சிருக்காங்க...
''இந்த மாதிரி, தமிழகத்துல பல இடங்கள்ல நடக்குது... 'இப்படி, மாணவர்களை கூட்டி தேர்வு எழுத வச்சா, கொரோனா பரவாதா'ன்னு, பெற்றோர் ஆதங்கப்படுறாங்க...'' என்றார்,
அந்தோணிசாமி.''புகார் மேல புகார் அனுப்பியும், கண்டுக்கவே இல்லை பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார், அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரையில, நுாற்றாண்டு புகழ் வாழ்ந்த மனமகிழ் மன்றம் ஒண்ணு இருக்குது... இதுல, நகரின் முக்கிய பிரமுகர்கள் உறுப்பினர்களா இருக்காங்க... இங்க, 'பார்' கூட இருக்குது பா...
''கொரோனா ஊரடங்கால, 'டாஸ்மாக்' மதுக் கடைகள் மூடிக் கிடந்த நேரத்துல, இந்த மன்றத்துல இருந்த மது பாட்டில்களை, உறுப்பினர்களுக்கு, அதிக விலைக்கு வித்திருக்காங்க... சில உயர் ரக மது பாட்டில்கள், பல ஆயிரம் ரூபாய்க்கு கூட வித்திருக்காங்க பா...
''இது பத்தி, மன்றத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர், மாவட்ட நிர்வாகம் முதல் உள்ளூர் போலீசார் வரை புகார் மனுக்களை அனுப்பியிருக்காங்க... ஆனா, முக்கிய பிரமுகர்கள் பலரும், அங்கே உறுப்பினர்களா இருக்கிறதால, புகார்களை யாரும் கண்டுக்கவே இல்லை பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''விஜயகாந்த் மகன், வெளிநாட்டுல சிக்கிட்டார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு தாவிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...''விஜயகாந்தின் ரெண்டாவது மகன் சண்முக பாண்டியன்... சினிமா நடிகர்... பிரபல இயக்குனர் படத்துல நடிக்க, தயாராகிண்டு இருக்கார் ஓய்...
''இதுக்கு, உடல் எடையை குறைக்கறதுக்காக, நெதர்லாந்து நாட்டின், ஆம்ஸ்டர்டாம் நகருக்கு, பிப்ரவரி மாசம் போயிருந்தார்... ஊரடங்கு பாதிப்பால, சர்வதேச விமானங்கள் ரத்தாகி, அங்கேயே தங்கிட்டார் ஓய்...
''அதே நேரம், கடுமையா உடற்பயிற்சிகள் செய்து, 'சிக்ஸ்பேக்'கும் போட்டுட்டார்... ஆனாலும், மகனை பார்க்க முடியாம, விஜயகாந்த் ரொம்பவே மன வருத்தத்துல இருக்கார்... அப்பப்ப, 'வீடியோ கால்'ல பேசி, ஆறுதல் பட்டுக்கறார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
பேச்சு முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X