இதே நாளில் அன்று | Dinamalar

இதே நாளில் அன்று

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
  இதே நாளில் அன்று

ஜூன், 25, 1931

உ.பி., மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்ற இடத்தில், 1931- ஜூன், 25-ம் தேதி பிறந்தவர், விஸ்வநாத் பிரதாப் சிங். இவரை, மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதுார், தன் வாரிசாக தத்தெடுத்தார்.கடந்த, 1971-ல், இந்திராவின் மத்திய அமைச்சரவையில், வர்த்தகத்துறை இணை அமைச்சராக பதவியேற்றார். 1980ல், உ.பி., முதல்வரானார். கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று, இரண்டே ஆண்டுகளில், அப்பதவியில் இருந்து விலகினார்.மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ராணுவத் தளவாடங்கள் ஊழல் விவகாரத்தில், பிரதமர் ராஜிவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். உடனே, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உடனே தன், எம்.பி., பதவியையும், கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த, 1988-ல், பல்வேறு கட்சிகளை இணைத்து, ஜனதா தளம் என்ற புதிய கட்சி உருவாக்கினார். 1989-ல், ஜனதா தளம் வெற்றி பெற்று, மத்தியில், பிரதமராக அமர்ந்தார். 11 மாதங்கள் மட்டுமே, பிரதமராக இருந்தாலும், பல்வேறு சாதனைகளை படைத்தார். 2008 நவ., 27ம் தேதி காலமானார்.'ஏழைகளின் பகதுார்' வி.பி.சிங் பிறந்த தினம் இன்று!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X