சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கும், வெளி
e pass, fake,  5 arrest, tamil nadu, போலி இ-பாஸ், 5 பேர் கைது

சென்னை: போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.


latest tamil newsமுறையாக விண்ணப்பித்தவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை என்றும், இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்தால் இ-பாஸ் பெற முடிவதாக சென்னை காவல்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்ததில் சென்னை தலைமைச் செயலகம் இ-பாஸ் வழங்கும் பிரிவில் பணியாற்றிய வருவாய் ஆய்வாளர்கள் குமரேசன், உதயா ஆகியோர் ரூ 3,000 முதல் ரூ 8,000 வரை பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், கால் டாக்சி ஓட்டுநர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
25-ஜூன்-202009:34:15 IST Report Abuse
RADE ஏற்கனவே இவர்கள் மீது லஞ்ச புகார் இருந்தால் மற்றும் அவர்கள் தற்போதைய சொத்து விவரம் மற்றும் இதர விசாரணைக்கு உட்படுத்தி வெறும் கண் துடைப்பு காட்டாமல் வருமான வரி துறை மற்றும் இதர அரசு துறைகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடும்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
25-ஜூன்-202009:01:32 IST Report Abuse
ocean kadappa india ஊழலுக்கு பெயர் சமூக நீதியில்லை நண்பரே. அது தனி மனித நெஞ்சுக்கு தரும் நீதி. நீதியை நெஞ்சில் வைத்திருந்தவர் இப்போதில்லை. நாடு ஊழலில் சிக்கியதற்கு அவர் நெஞ்சுதான் காரணம்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
25-ஜூன்-202008:56:52 IST Report Abuse
ocean kadappa india அரசு பணியை நேர்மையாக ஒழுங்காக செய்யாமல் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசபட்டு ஏண்டாப்பா இப்படி வீணா மாட்டிக்கிறீங்க. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X