போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (10)
Share
e pass, fake,  5 arrest, tamil nadu, போலி இ-பாஸ், 5 பேர் கைது

சென்னை: போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.


latest tamil news



முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை என்றும், இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்தால் இ-பாஸ் பெற முடிவதாக சென்னை காவல்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்ததில் சென்னை தலைமைச் செயலகம் இ-பாஸ் வழங்கும் பிரிவில் பணியாற்றிய வருவாய் ஆய்வாளர்கள் குமரேசன், உதயா ஆகியோர் ரூ 3,000 முதல் ரூ 8,000 வரை பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், கால் டாக்சி ஓட்டுநர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X