அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை வேதனை வலையில் வீழ்த்தி விடாதீர்கள்: ஸ்டாலின்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
மக்களை வேதனை வலை,வீழ்த்தி விடாதீர்கள்: ஸ்டாலின்

சென்னை :'கொரோனா பேரழிவில் இருந்து, மக்களை காப்பாற்றுங்கள்; மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: சென்னையில் மட்டும் அதிகம் பரவி வந்த கொரோனா தொற்று, ஒரு வாரமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதை தடுக்க வழியற்ற முதல்வர் இ.பி.எஸ்., கோவைக்கும், திருச்சிக்கும் பயணம் செல்கிறார். குடிமராமத்து பணிகளை பார்வையிடவும், இதர கட்டுமான பணிகளை பார்வையிடவும் செல்கிறார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, இதயம் மரத்து, இரக்கமற்ற தன்மை தலைக்கேறி, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையில், எதேச்சதிகாரம் பெருகி வருவதையே காட்டுகிறது.தமிழக மக்கள் இப்போது இருப்பது, மருத்துவ நிபுணர்கள் சொல்லும், கோல்டன் பீரியட்; இந்த நேரத்தில், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். உங்களது அலட்சியத்தால், அக்கறை இன்மையால், தன்னிச்சையான அணுகுமுறையால்,இந்த, 90 நாட்களையும் வீணடித்தது போல,இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள்.

கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்; வாழ்வியல் பேரிடரில் இருந்து மக்களை மீட்டுத்தாருங்கள். காலம் உங்களுக்கு இட்டிருக்கும் கடமையிலிருந்து, எப்படியாவது தப்பித்து, நழுவி விடலாம் என்று கற்பனையிலும் நினைக்காதீர்கள்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
02-ஜூலை-202015:36:43 IST Report Abuse
Priyan Vadanad அரசு என்னதான் செய்ய வேண்டுமாம்? அவர் சொல்லமாட்டார்.
Rate this:
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
25-ஜூன்-202021:46:48 IST Report Abuse
C.Elumalai தீயமூக ஆட்சியில்,மக்கள் மின்சார இல்லை ஆனா கட்டணம் உண்டு. உங்கள் திறமையை பார்த்தோமே மக்கள்அவதிபடும்போது , மானாட மயிலாட நிகழ்ச்சியை ரசித்ததை போல்,எடப்பாடி இல்லை மக்களுக்குபோடும்,திட்டங்களை பார்வையிடுகிறார்.வயிற்றெரிச்சல்?.
Rate this:
Cancel
சத்தியம் - Bangalore,இந்தியா
25-ஜூன்-202020:50:56 IST Report Abuse
சத்தியம் நடிகன்டா.... நடிகன்டா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X