தாராவியில் குறையும் கொரோனா பாதிப்பு ; சிவசேனா பாராட்டு

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவின் தாராவியில் கொரோனா பாதிப்பு விகிதம் ஜூன் மாதத்தில் 1.02 சதவீதமாக குறைந்து வருவது கொரோனாவின் தோல்வி என சிவசேனா பாராட்டு தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. மஹா.,வை பொறுத்தவரை மும்பை , தாராவி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தான் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. ஆசியாவிலேயே அதிக குடிசை பகுதிகளை கொண்ட தாராவியில் நோய் தொற்றின் பாதிப்பு தொடரந்து அதிகரித்து எண்ணற்ற வர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்காக மும்பை மற்றும் தாராவியில் நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த மும்பை நகராட்சி சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது கடந்த சில தினங்களாக தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது.


latest tamil news




தாராவியில் , கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. நேற்று 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். தாராவியில் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 2,189 ஆக உள்ளது. தாராவியில் பரவியுள்ள தொற்றை கட்டுப்படுத்த, கடுமையான பணியை வெற்றிகரமாக செய்ததற்காக மஹாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை நகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. பாதிப்புகளை குறைக்க ஊரடங்குகள் கடுமையாக்கப் பட்ட போது அதற்கு ஒத்துழைப்பு தந்த தாராவி பகுதிவாழ் குடியிருப்பாளர் களுக்கு சிவசேனா அரசு நன்றி தெரிவித்துள்ளது.


latest tamil news



பாதிப்புகளை குறைத்து, தாராவியில் கொரோனா தொற்று விகிதத்தை குறைத்ததற்காக, பிரஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) கமிஷனர் ஐ.எஸ்.சஹால் மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஆகியோருக்கு இது மேலும் பாராட்டுக்களைப் பெற்று தந்துள்ளது. ஆயினும் கொரோனா வைரசிற்கு எதிரான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மஹா.,வின் பல்வேறு இடங்களில் நோய் அதிகரித்து வருகின்றன. நோய் தொற்றின் வளர்ச்சி விகிதம் ஏப்.,லில் 12 சதவீதமாகவும், மே.,வில் 4.3 ஆகவும், ஜூனில் 1.02 சதவீதமாக குறைந்தது. ஒவ்வொரு 18 நாட்களுக்கும் பாதிப்பு இரட்டிப்பாக உயர்ந்தது. பி.எம்.சி நான்கு டி இன் டிரேசிங், டிராக்கிங், டெஸ்டிங் மற்றும் ட்ரீட்டிங் ஆகியவற்றை தீவிரமாக பின்பற்றும் ஒரு மாதிரியை ஏற்றுக்கொண்டது. இந்த அணுகுமுறையில் செயல்திறன் மிக்க ஸ்கிரீனிங் போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X