பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா; தொற்று 314 ஆக உயர்வு

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை: கோவையில், முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட, 16 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.latest tamil news
கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இன்று, கோவை காட்டூர் பகுதியை சேர்ந்த வால்ப்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அதேபோல், பொள்ளாச்சி கோட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 23 வயது பெண் போலீஸ் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டள்ளது.தனியார் மருத்துவமனைக்கு சீல்


தொண்டாமுத்தூர் அடுத்த கரடிமடையை சேர்ந்த, 35 வயது இளைஞர், உடல்நலக்குறைவால், ஓணாப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுமுன்தினம் அவருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர், சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தனியார் மருத்துவமனைக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிக்கும் சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர்.


latest tamil news
மேலும், நீலகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய சவுரிபாளையத்தை சேர்ந்த 34 வயது பெண், மதுரைக்கு சென்று வந்த ஹோப்காலேஜ் பகுதியை சேர்ந்த 53 வயது பெண், காளப்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், சரவணம்பட்டியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை உட்பட 16 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 314 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜூன்-202011:52:23 IST Report Abuse
Malick Raja கோரோனோவுக்கு விதிவிளக்கெல்லாம் .. கோவணம் காட்டியவர் முதல் கோடீஸ்வரர்கள் வரை .. பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை .. doorman.to.chairman.. அனைவருக்கும் மதம் ,இனம் ,பாலின பாகுபாடற்று உரியமுறையில் கோரோனோ தன்கடைமையை செய்கிறது .. மனிதனின் தர்க்குறித்தனம் ,கர்வம் ,அகம்பாவம் ,நீதியின்மை ,என அணைத்து தீஞ்செயல்களுக்கும் மருந்தாக கொரோனா வந்துள்ளது என்பது மட்டும் உண்மை .. கொரோனா தனது இலக்கை எட்டியபின்பே அகன்றுபோகும் அதுவரை நீண்டு போகும் என்பது உலகத்தில்வாழ்பவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளதும் உண்மைதானே மனிதநேயம் மனிதமாண்பு ,நீதிநேர்மை உடையோருக்கு கொரானா பாதுகாப்பு அரணாக இருக்கும் அவர்களை தீண்டாது என்பதும் உண்மை
Rate this:
Cancel
25-ஜூன்-202008:02:09 IST Report Abuse
மதுமிதா கொரோனா அரசியல்வாதிகளை மையம் கொண்டுள்ளது. எச்சரிக்கை உணர்வு குறைந்து விட்டது. Take care everybody.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X