மாணவர்களின் ஆரோக்யம் மிக முக்கியம்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஐதராபாத் : கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், மாணவர்களின் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.latest tamil newsதெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் பல்கலையாக கருதப்படும் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் 'உயர்கல்வி மனித வளங்களில் கொரோனாவின் தாக்கம்' குறித்த கருத்தங்கினை (வெபினார்) நடத்தியது. 2 நாட்கள் நடந்த விழாவில் மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில், தொற்றுநோய் பாதிப்பு காரணமாக, உலகெங்கிலும் உள்ள 1.5 பில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் இருந்து வெளியேறினர். மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. என்னதான் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தினாலும், வழக்கமாக நடத்தப்படும் வகுப்பறை கல்வியை போல தரமாகவும், சிறந்ததாகவும் இருக்க முடியாது. அனைத்து நடவடிக்கையையும் எடுக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.


latest tamil newsஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி கற்பதால், வழக்கமான மற்றும் அவர்களுக்கு பரிட்சையப்பட்ட கல்வி நிறுவனங்கள் , நண்பர்கள் மற்றும் கேண்டீன் ஆகியவற்றைக் காணவில்லை என்பதால் அவர்கள் மனச்சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேர்மறையான மனநிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு பங்களிக்கிறது. அதே நேரத்தில் எதிர்மறை மனநிலை நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. எவ்வாறாயினும் மாணவர்களின் ஆரோக்யமே முக்கியம். தொற்று நோய் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு பல சவால்கள் உள்ளன. உடல்நலம் மற்றும் பொருளாதாரத்திற்கு பின், கல்வித்துறை அதிகமாக பாதிக்கப்படுகிறது. தொற்றுநோய் காரணமாக இளைஞர்களுக்கு கற்றல் மற்றும் வேலை வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202006:19:45 IST Report Abuse
ஆப்பு அரசு ஓய்வில் இருந்தால் இப்பிடியெல்லாம் பேசி வேலை செய்வதாய் காட்டிக்கொள்ளலாம்.
Rate this:
Gopinathan S - chennai,இந்தியா
25-ஜூன்-202011:53:08 IST Report Abuse
Gopinathan Stoday's duty over....this is called KALI KAALAM...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X