எம்.பி.,க்கள் டில்லி வர தயக்கம்: பார்லி.,கூட்டத்தொடர் நடக்குமா? | Dinamalar

எம்.பி.,க்கள் டில்லி வர தயக்கம்: பார்லி.,கூட்டத்தொடர் நடக்குமா?

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (7)
Share
கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, டில்லி வருவதற்கு, எம்.பி.,க்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. இதனால், மழைக்கால கூட்டத்தொடரை கூட்டும் விவகாரத்தில், புதிய சிக்கல் உருவாகியுள்ளது.இது குறித்து, டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:ஊரடங்கு தளர்வுக்குப் பின், விமானப் போக்குவரத்து துவங்கியது. அதனால், டில்லிக்கு, எம்.பி.,க்கள் வருவதில் சிக்கல் தீர்ந்தது என,
எம்.பி.,க்கள் டில்லி வர தயக்கம்: பார்லி.,மழைக்காலகூட்டத் தொடர் நடக்குமா?

கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, டில்லி வருவதற்கு, எம்.பி.,க்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. இதனால், மழைக்கால கூட்டத்தொடரை கூட்டும் விவகாரத்தில், புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

இது குறித்து, டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:ஊரடங்கு தளர்வுக்குப் பின், விமானப் போக்குவரத்து துவங்கியது. அதனால், டில்லிக்கு, எம்.பி.,க்கள் வருவதில் சிக்கல் தீர்ந்தது என, நம்பப்பட்டது. அதன் பின், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு இருவரும், பல முறை ஆலோசனை நடத்தினர்.பின், மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான, அனைத்து வழிமுறைகளையும் ஆராயும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.இதையடுத்து, பார்லிமென்டை கூட்டுவது தொடர்பாக, எம்.பி.,க் களின் மனநிலை என்ன என்பதை அறிய, அதிகாரிகள் அவர்களிடம் பேசிப் பார்த்தனர்.உடல் உபாதைஅப்போது, 90 சதவீத எம்.பி.,க்களுக்கு, டில்லிக்கு வர, பெரும் தயக்கம் உள்ளதை அறிய முடிந்தது. காரணம், அவர் களில் பெரும்பாலானோர், 50 வயதை தாண்டியவர்கள்; வேறு உடல் உபாதைகளும் உள்ளன.எனவே, தற்போதைய சூழ்நிலையில், டில்லிக்கு வந்து தங்கி, பார்லிமென்ட் வருகை தருவதில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும், அவர்கள் தயாரில்லை. பேசிய பலரும், 'டில்லியில் கொரோனா தொற்று, நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தங்களால், டில்லிக்கு வருவது சாத்தியமில்லை' என, கூறியுள்ளனர்.அதோடு, புதிய எம்.பி.,க்களில் பலருக் கும், இன்னும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இவர்களில் பலருக்கும், மாநில அரசின் இல்லங்களில் தான் அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.


நட்சத்திர ஓட்டல்தற்போதைய நிலவரப்படி, டில்லியில் உள்ள எந்த மாநில இல்லங்களும் திறக்கப்படவில்லை.உணவகம் உள்ளிட்ட அனைத்துமே மூடப்பட்டு, ஊழியர்கள், அலுவலர்கள் என யாருமே இல்லாமல், வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், இந்த இல்லங்களுக்கு, எம்பி.,க்கள் எப்படி வந்து தங்கி, பார்லிமென்டிற்கு வர முடியும் என்பது, கேள்விக்குறி. டில்லியில், தற்போது நட்சத்திர ஓட்டல் களில் கூட, தங்க முடியாத நிலை இருக்கிறது.

அதிகாரிகள், எம்.பி.,க் களிடம் பேசிய போது, இத்தனை நடைமுறை சிக்கல்கள் இருப்பதை புரிந்து கொண்டனர். இவை அனைத்தையும், சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.இதனால், குளிர்காலக் கூட்டத்தொடரை கூட்டுவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன. இவை தீர்க்கப்பட்டால் மட்டுமே, எம்.பி.,க்கள் டில்லி வருவது, எளிதாக இருக்குமென தெரிகிறது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது டில்லி நிருபர் -


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X