ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்:அமைச்சரவை ஒப்புதல்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு, கூட்டுறவு வங்கிகள்:அமைச்சரவை ஒப்புதல்

கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்துள்ளோரை பாதுகாக்கும் வகையில், நாடு முழுதும் உள்ள, 1,500 கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடந்தது.


அமைச்சரவை ஒப்புதல்



இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்தது போன்ற மோசடிகளை தடுக்கும் வகையில், நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், பல மாநிலங்களில் இயங்கும், 58 கூட்டுறவு வங்கிகள், இனி, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருக்கும்.இந்த வங்கிகளில், 8.6 கோடி முதலீட்டாளர்கள் செய்துள்ள, 4.84 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழுள்ள துணை பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டு அளவை பகிர்ந்து கொடுப்பது தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ஜி. ரோஹிணி

தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்னை காரணமாக, இந்த கமிஷனின் பதவிக் காலம், 2021, ஜன., 31 வரை நீட்டிக்கப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சி துறையில், தனியாருக்கும் வாய்ப்பு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், நம் விண்வெளி கட்டமைப்பு வசதிகளை, தனியார் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். கோள்கள் குறித்த ஆய்வுகளுக்கும் அனுமதிக்கப்படும். இதற்காக, இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் துவக்கப்பட்டு உள்ளது.


3 சதவீத வட்டி



இதன் மூலம், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், அதிக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களில், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடியும்.சிறு தொழில்களுக்கு வழங்கப்படும், 'முத்ரா' கடன் திட்டத்தின் கீழ், சிஷு முத்ரா கடன் பெற்று உள்ளோருக்கு, இந்தாண்டு மார்ச், 31ல் இருந்து, அடுத்த, 12 மாதங்களுக்கு, 2 சதவீத வட்டி தள்ளுபடி வசதி அளிக்கப்படும். சிஷு முத்ரா திட்டத்தின் கீழ், அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.பால் பொருட்கள், கோழி வளர்ப்பு மற்றும் இறைச்சி பதப்படுத்துதல் ஆலைகள் அமைக்க, 15 ஆயிரம் கோடி ரூபாய் கட்டமைப்பு நிதி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், 3 சதவீத
வட்டி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதன் மூலம், புத்த மத சுற்றுலா மையங்களுக்கான சுற்றுலா மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


சீர்திருத்தம் தொடரும்



விண்வெளி, சிறு தொழிலாளர்கள், விவசாயிகள், கிராமங்கள், முதலீட்டாளர்கள் என, பல்வேறு தரப்பினர் பயன்பெறும் வகையில், பல நல்ல முடிவுகள், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுஉள்ளது. இவை, நம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மிகப் பெரிய பங்காற்றும். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு, இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்.நரேந்திர மோடி, பிரதமர் -- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
25-ஜூன்-202022:08:19 IST Report Abuse
konanki ஐயோ ஐயோ அடிக்கிறாங்களே திருட முடியாம அடிக்கிறாங்களே அம்மா அடிக்காறங்ககளே கொள்ள அடிக்க உடமா அடிக்காறங்களே
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
25-ஜூன்-202022:05:07 IST Report Abuse
konanki சரியான ரிவிட்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
25-ஜூன்-202022:04:48 IST Report Abuse
konanki அடிச்சான் பாருய்யா ஆப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X