பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் வரும் 29ம் தேதிவருவாய் தீர்வாயம் துவக்கம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும், 1429-ம் பசலிக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களுக்கும் வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் விழுப்புரம் தாலுகாவிலும், கூடுதல் கலெக்டர் விக்கிரவாண்டி தாலுகாவிலும், வானுாருக்கு விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வும், திண்டிவனத்திற்கு கலால் உதவி ஆணையரும், செஞ்சிக்கு தனித்துணை கலெக்டர் (ஆர்பிட்ரேஷன் விழுப்புரம்), மேல்மலையனுாருக்கு தாட்கோ மாவட்ட மேலாளரும், மரக்காணத்திற்கு திண்டிவனம் சப் கலெக்டரும், கண்டாச்சிபுரத்திற்கு தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), திருவெண்ணெய்நல்லுாருக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை 29.6.2020 முதல் 15.7.2020 வரை இணையதளம் மற்றும் இ -சேவை மையங்கள் மூலமாக மட்டும் அனுப்பப்பட வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டாம். வருவாய் தீர்வாயம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, விழுப்புரம் tahsildarvpm2012@gmail.com, விக்கிரவாண்டி vikravanditaluk@gmail.com, வானுார் vantaluk.tnvpm@nic.in, திண்டிவனம் tintaluk.tnvpm@nic.in, செஞ்சி gingeetahsildar@gmail.com, மேல்மலையனுார் melmalayanurtahsildar@gmail.com, மரக்காணம் tahsildarmrkm@gmail.com, கண்டாச்சிபுரம் kandachipuram.taluk@gmail.com, திருவெண்ணெய்நல்லுார் tahtvn19@gmail.com என்ற இ மெயில் முகவரிக்கு பொதுமக்கள் மனுக்களை அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X