பொது செய்தி

தமிழ்நாடு

கோழிப்பட்டு கிராமத்தில்வேளாண் விழிப்புணர்வு முகாம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கோழிப்பட்டு கிராமத்தில் வேளாண் துறை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

காணை வட்டார வேளாண் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் தலைமை தாங்கினார். காணை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன் முன்னிலை வகித்தார்.இதில், நுண்ணீர் பாசன திட்டம், மண்வள அட்டை வழங்கும் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், நீர்வள நில வள திட்டம், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், பிரதமரின் நிதி உதவி திட்டம், ஓய்வூதிய திட்டம், கூட்டு பண்ணைய திட்டம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அப்போது, வேளாண் அலுவலர் வரதராஜன், உதவி பொறியாளர் சுகன், வட்டார தொழில் நுட்ப அலுவலர் தமிழ்செல்வி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் மணிவண்ணன், செல்வகுமார், அன்பு, இளங்கோவன், அய்யப்பன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X