பொது செய்தி

தமிழ்நாடு

கண் துடைப்பிற்காக துார் வாரப்பட்ட வெள்ளாற்று பாசன வாய்க்கால்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளாற்று தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை கண் துடைப்பிற்காக பொதுப்பணித் துறையினர் துார்வாரி சென்றுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வீராணம் ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டிற்கு பாசனத்திற்கு செல்லும் 2 கி.மீ., துாரத்திற்கு குமாரக்குடி வாய்க்கால் துார் வாரும் பணிக்காக காவிரி டெல்டா சிறப்பு நிதியில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு துார்வாரும் பணியை பூஜை போட்டு துவக்கினர்.பொக்லைன் உதவியோடு, துார்வாரும் பணியை துவக்கி, 200 மீட்டர் வரை மட்டுமே புதர்களை அகற்றி, மண்ணை சீரமைத்தனர். பின்னர், பணியை நிறுத்தியுள்ளனர். 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனத்திற்கு செல்லும் வாய்க்கால் அணைக்கட்டு வரை துார்வாராமல் பாதியிலேயே விட்டுள்ளனர்.

ஏற்கனவே வாய்க்கால் முழுவதும் மண் துார்ந்து, புதர் மண்டியுள்ளது. தற்போது துார்வாரும் பணியை பாதியிலே விட்டுள்ளதால் தண்ணீர் பாசனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே கிடப்பில் போட்டுள்ள குமாரக்குடி வாய்க்காலை மாவட்ட பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து முழுமையாக துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X