சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

செஞ்சி : செஞ்சியில் வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செஞ்சியில் பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷனின் அவசர கூட்டு கூட்டம் இதன் தலைவர்கள் இளஞ்செழியன், சுதாகரன் தலைமையில் நடந்தது. இதில் கடந்த 21ம் தேதி பார் அசோசியேஷன் உறுப்பினர் வழக்கறிஞர் டைட்டசை சமூக விரோதிகள் தாக்கியதை கண்டித்தும், இது குறித்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

கூட்டத்திற்கு பிறகு வழக்கறிஞர்கள் செஞ்சி டி.எஸ்.பி., (பொறுப்பு) ரவீந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர். பிறகு அங்கு சிறிது நேரம் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X