பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகம் தற்காலிக இடமாற்றம்: எம்.எல்.ஏ., ஆய்வு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தற்காலிக இட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பழுதடைந்ததால், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின்கீழ் ரூபாய் 2 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணி தொடங்கப்படவுள்ளது. புதிய கட்டடம் கட்டுமான பணியையொட்டி விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் அலுவலகம் நேற்று முதல் பனையபுரம் சமுதாய கூடத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
நேற்று காலை இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் செயல்படும் அலுவலகத்தினை எம்.எல்.ஏ., முத்தமிழ் செல்வன் ஆய்வுசெய்து, தற்பொழுது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலையில் அரசு மக்களுக்கு தேவையான சுகாதார வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.பி.டி.ஓ.,க்கள் எழிலரசு, நந்தகோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் முகுந்தன், எசாலம் பன்னீர், பா.ம.க., மாநில துணைத்தலைவர் அன்புமணி, வங்கி தலைவர்கள் நரசிம்மன், நெடுஞ்செழியன், இயக்குனர் ஜோதி ராஜா, மேலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளர்கள் ஜெயலட்சுமி, சோமசுந்தரம், ஜான்சிராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X