பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் குழாய் சீரமைப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், சிதம்பரம் சாலையில் சேதமடைந்திருந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது.

விருத்தாசலம் கஸ்பா, பூதாமூர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பெரியார் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன், விருத்தாசலம் - கடலுார் சாலை, சிதம்பரம் சாலை பிரியும் இடத்தில், இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி, நேற்று 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, நேற்று நகராட்சி சார்பில், சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X