பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆனந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டமான சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன உபகரணங்கள், அரசு நிர்ணயித்த தொகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.மேலும் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. அதில் குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்க செலவிடும் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ. 25 ஆயிரத்திற்கு மிகாமல் வழங்கப்படுகிறது.

அதுபோல், டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்பு செட் நிறுவிட அதன் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.15 ஆயிரத்திற்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசன குழாய் அமைக்க 50 சதவீத தொகை அல்லது ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரத்திற் கு மிகாமலும் வழங்கப்படுகிறது.பாதுகாப்பு வேலியுடன் தலைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ஒரு கன மீட்டருக்கு 350 அல்லது ரூ.40 ஆயிரத்திற்கு மிகாமல் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற கணினி சிட்டா, அடங்கல், சிறு குறு விவசாய சான்று அல்லது கிசான் நிதியுதவி பெற்ற சான்றுடன், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம் .மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குனர் 99445-93487, 93840-67916 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X