இந்துஜா குடும்ப சொத்து தகராறு

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 இந்துஜா குடும்ப சொத்து தகராறு

லண்டன்; இந்துஜா சகோதரர்களின் சொத்து பிரச்னை தொடர்பான வழக்கில், முக்கிய கடிதம் ஒன்று செல்லாது என, லண்டன் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த, 1914ல் பரமானந்த் தீப்சந்த் இந்துஜா என்பவர் துவக்கிய, இந்துஜா நிறுவனம், வாகனம், வங்கி, நிதி, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு, 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, குழுமமாக வளர்ந்துள்ளது. அங்கீகாரம்இதை, ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா, 83, கோபிசந்த், பிரகாஷ், அசோக் ஆகிய நான்கு சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

இவர்கள், கடந்த, 2014ல், சொத்து பிரச்னையில் மோதல் ஏற்படாமல் இருக்க, ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, ஒரு சகோதரரின் சொத்தை, இரண்டாமவர் நிர்வகிக்கலாம். இரண்டாமவர் சொத்தை மூன்றாவது சகோதரர் நிர்வகிப்பார். இப்படி ஒருவரின் சொத்தை மற்றொருவர் நிர்வகிக்கும் போது, குடும்பத்தில் சொத்து பிரச்னை ஏற்படாது என்ற நோக்கத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நினைவுத் திறன் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ள, ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜாவின் மகள், வினு, லண்டன் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:என் தந்தையின் நிர்வாகத்தில், சுவிட்சர்லாந்தில் உள்ள இந்துஜா வங்கியைக் கைப்பற்ற, அவரது சகோதரர்கள் முயற்சிக்கின்றனர்.அதற்கு, என் தந்தை உள்ளிட்ட நான்கு சகோதரர்கள் இடையிலான ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டுகின்றனர். இந்த ஒப்பந்தம், ஒரு கடிதம் போன்றதுதான். அதற்கு சட்ட அங்கீகாரம் ஏதும் கிடையாது. அது, முறைப்படி பதிவு செய்யப்படவில்லை.

எனவே, அந்த கடிதத்தை செல்லாது என, அறிவிக்க வேண்டும். அத்துடன், அந்த கடிதத்தின் அடிப்படையில், நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும். என் தந்தை நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் சார்பாக சட்ட நடவடிக்கை எடுக்க, எனக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை

இந்த வழக்கை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், சகோதரர்களின் கடிதம் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்பதால், அது சட்டப்படி செல்லுபடியாகாது எனக் கூறி, தந்தையின் சார்பாக வினுவை வழக்காட அனுமதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, பிரிட்டனில் தலைமையகத்தை கொண்டுள்ள இந்துஜா குழுமம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'குடும்ப பிரச்னை, நீதிமன்றத்திற்கு வந்தது துரதிருஷ்டவசமானது, எனினும், இதனால், குழும நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
28-ஜூன்-202009:01:49 IST Report Abuse
Sampath Kumar சொத்து என்று இருந்தால் சண்டை என்பது பிரிக்க முடியாது வறுமையும் புலமையும் போல
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஜூன்-202010:40:40 IST Report Abuse
Malick Raja வழக்குகளுக்கு வேலை இருக்காதோ ?
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-ஜூன்-202009:03:36 IST Report Abuse
மலரின் மகள் பங்கு சந்தையில் இவர்களின் குழுமத்து பங்கின் விலை வேகமாக குறையுமா என்று அனாலிசிஸ் செய்திருந்தால் நலம். வெறும் செய்திகள் நமக்கு எந்த விதத்திலும் லாபமில்லை. நன்றாக குறையும் என்றால் ஒரு கோடிக்கு பங்குகளை வாங்கி விடலாமல்லவா? செய்தி கிடைத்தவுடன் வெல்த் மனஜரிடம் சொல்லி கவனிக்கவும் நிருவகிக்கவும் சொல்லியாயிற்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X