சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய துணை மின்நிலையம் அமைக்க வி.குமாரமங்கலம் விவசாயிகள் கோரிக்கை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கம்மாபுரம் : வி.குமாரமங்கலம் புதிய துணை மின்நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கம்மாபுரம் அடுத்த வி.குமாரமங்கலம் கிராமத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான 10.79 ஏக்கர் இடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு, 2017ம் ஆண்டு 230 கே.வி., மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர் செய்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருவாய்த்துறையினர் அளவீடு செய்து, அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. துணை மின்நிலையம் அமைக்க தேவையான இடம் அப்பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அதில், காலனி பகுதிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. அதனை மாற்றித்தர வி.குமாரமங்கலம் ஊராட்சி சார்பில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றி, கட்டுமானப் பணி துவங்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில், குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. எனவே, துணை மின்நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்த இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றி, கட்டுமானப் பணியை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X