பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகர உழவர் சந்தை அரசு பள்ளி வளாகத்திற்கு மாற்றம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் நகர உழவர் சந்தை, அரசு பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வந்த உழவர் சந்தை, கொரோனா தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கையாக, நகராட்சி பள்ளி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், தற்காலிகமாக காய்கறி கடைகள் இயங்கியது.இந்நிலையில், பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டதை தொடர்ந்து, பழைய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள், நகராட்சி பள்ளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனால், அங்கு இடநெரிசல் ஏற்பட்டதுடன், திறந்த வெளியில் கடைகளை வைத்து, உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.இதனையடுத்து, விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோடு, பீமநாய்க்கன்தோப்பு நகராட்சி பள்ளி வளாகத்திற்கு, உழவர் சந்தை நேற்று இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு, விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து வைத்து, விற்பனை செய்யத் துவங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X