ரஷ்யாவின் வெற்றி தினப் பேரணி இந்திய படைகளும் பங்கேற்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 ரஷ்யாவின் வெற்றி தினப் பேரணி இந்திய படைகளும் பங்கேற்பு

மாஸ்கோ,; இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா பெற்ற வெற்றியின், 75வது ஆண்டையொட்டி நடைபெற்ற பிரமாண்ட வெற்றி தினப் பேரணியில், இந்தியாவின் முப்படைகளும் பங்கேற்றன.

இந்த நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங்கும் பங்கேற்றார். இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாஜிப் படையை, ரஷ்யா வென்றது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், மே, 9ம் தேதி, வெற்றி தினமாக, ரஷ்யாவில் கொண்டாடப்படும். இந்த வெற்றியின், 75வது ஆண்டையொட்டி, சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, ரஷ்யா திட்டமிட்டிருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து, 'ஜூன், 24ம் தேதி பிரமாண்ட வெற்றி தின பேரணி நடத்தப்படும்' என, ரஷ்ய அதிபர், விளாதிமீர் புடின் அறிவித்திருந்தார். அதன்படி, பிரமாண்ட ராணுவப் பேரணி நேற்று நடந்தது. கடந்த, 1945ல், ஜூன், 24ல் தான், ரஷ்ய படைகளும், உடன் போரிட்ட நாடுகளும் இணைந்து, வெற்றியைக் கொண்டாடின. அதனால், இந்த தேதியை தேர்ந்தெடுத்து உள்ளதாக, புடின் கூறியிருந்தார்.இந்த ஆண்டு, 13 ஆயிரம் ரஷ்ய படையினருடன், இந்தியா, சீனா உள்பட, 12 நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினரும் பேரணியில் பங்கேற்றனர்.

இதற்காக, இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த, 75 வீரர்களை, ஏற்கனவே ரஷ்யா சென்றனர்.இந்திய அரசின் சார்பில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங், வெற்றி தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இதற்காக மூன்று நாள் பயணமாக அவர் ரஷ்யாவுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார்.

ரஷ்ய துணைப் பிரதமர் யூரி போரிசோவை அவர் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.வெற்றி தின விழாப் பேரணியில் பங்கேற்பதற்கு முன், சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 'ரஷ்யாவின் வெற்றி தினப் பேரணியில் நம்முடைய முப்படைகள் பங்கேற்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது' என, ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X