பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்....

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 செய்தி சில வரிகளில்....

மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம்

புதுடில்லி: டில்லி, சட்டர்புர் பகுதியில், 'ராதா சோமி பீஸ்' என்ற நாட்டின் மிகப் பெரிய, கொரோனா சிகிச்சை மையத்தின் கட்டுப்பாட்டை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை ஏற்றுள்ளது. 10 ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட இந்த மையம், 1,000த்திற்கும் அதிகமான டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களுடன், நாளை முதல் செயல்படத் துவங்கும்.

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ., பலி

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., சட்டசபை உறுப்பினரான, தமோனாஷ் கோஷ், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது, 60. அவருக்கு, இதய நோய், சிறுநீரக கோளாறு இருந்தன. மூன்று முறை சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய அவரது மறைவுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இரங்கல் தெரிவித்துள்ளார்.

பயிற்சி மாலுமிகளுக்கு பாதிப்பு

புனே: மஹாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள லோனாவாலா பகுதியில், கடற்படை மாலுமிகளின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு, ஊரடங்கு உத்தரவு தளர்வைத் தொடர்ந்து, மீண்டும் பயிற்சிக்கு வந்த, 157 மாலுமிகளில், 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெட்ரோலை விட டீசல் விலை உயர்வு

புதுடில்லி: டில்லியில், தொடர்ந்து, 17 நாட்களாக, பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டு வந்தது. நேற்று, டீசல் விலை மட்டும், லிட்டருக்கு, 48 காசுகள் உயர்த்தப்பட்டன. இதையடுத்து, டில்லியில் முதன் முறையாக, பெட்ரோலை விட, டீசல் விலை, லிட்டருக்கு, 12 காசுகள்அதிகரித்து, 79.88 ரூபாயாக உயர்ந்துள்ளது.

15 பி.எஸ்.எப்., வீரர்களுக்கு பாதிப்பு

ராய்புர்: சத்தீஸ்கர் மாநிலம், கன்கர் மாவட்டத்தில் உள்ள, பி.எஸ்.எப்., வீரர்கள், 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, அவர்கள், இரு வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில்

லேசான நில நடுக்கம்

புதுடில்லி: ஹரியானா மாநிலம், ரோடக் நகரில், நேற்று மதியம், 12:58 மணிக்கு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 2.8 ஆக பதிவானது என, தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஏப்., 12 முதல், டில்லி தலைநகர் பிராந்தியத்தில், 18 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவற்றில், ரோடக் நகரில் மட்டும், எட்டு முறை நில நடுக்கம் உண்டானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X