அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியலை விட்டு விலக தயார்: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் சவால்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
அரசியலை விட்டு விலக தயார்:ஸ்டாலினுக்கு ஜெயகுமார் சவால்

சென்னை: 'தெர்மல் ஸ்கேனர்களை அதிக விலைக்கு வாங்கியதாக ஸ்டாலின் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு ஒதுங்க தயார்; நிரூபிக்க முடியாவிட்டால், ஸ்டாலின் அரசியலை விட்டு ஒதுங்க தயாரா...' என, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சவால் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:தெர்மல் ஸ்கேனர்களை, 9,175 ரூபாய்க்கு வாங்கியதாக, சென்னை மாநகராட்சி மீது, ஸ்டாலின் அவதுாறாக பழி போட்டிருக்கிறார். உண்மையில், 1,765 ரூபாய்; 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியுடன் வாங்கப்பட்டுள்ளது. தான் கூறியதை, ஸ்டாலின் ஆதாரத்துடன் நிரூபித்தால், நான் அமைச்சர் பொறுப்பு உட்பட, அனைத்து அரசியல் பதவிகளையும் துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார்.


நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின், தி.மு.க., தலைவர் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவிகளை துறந்து, அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும்.வரலாற்றில், ஒரு அரசின் செயல்பாடுகளை, போற்றி புகழ்ந்து பாடிய புலவர்கள் உண்டு. நல்ல அரசுகளின் மீது, புழுதி வாரி துாற்றி பாடிய புலவர்களும் உண்டு.மக்கள் பணியில், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வரும் அரசின் மீது, புழுதி வாரி துாற்றிய புலவர்கள், மக்கள் எண்ணங்களில், சகுனிகளாகவும், சாத்தான்களாகவும் மட்டுமே, இன்றளவும் நிலைத்து நிற்கின்றனர் என்பது வரலாற்று உண்மை.

ஜெயலலிதா வழியில் செயல்படும், இந்த அரசு மீது, புழுதிவாரி துாற்றி, பொதுமக்கள் இடையே, சகுனியாகவோ அல்லது சாத்தான்களாகவோ, எதிர்கட்சி தலைவர் இடம் பெற வேண்டாம்.
இனிமேலாவது, அரசின் நடவடிக்கைகளுக்கு, ஒத்துழைப்பு கொடுத்து, மருத்துவ பேரிடர் காலத்தில், பொதுமக்களுக்கு பணியாற்றிட, ஸ்டாலின் முன்வர வேண்டும்.இவ்வாறு, ஜெயகுமார் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜூன்-202016:58:15 IST Report Abuse
Lion Drsekar இது போன்ற செய்திகள் மக்களை திசை திருப்ப மட்டுமே, எல்லோரும் ஒருவரே, வந்தே மாதரம்
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
25-ஜூன்-202014:08:23 IST Report Abuse
PANDA PANDI அய்யா சவால் விட்டு விலகுவதை விட்டுவிடுங்கள் அம்மா அம்மா அம்மா. அம்மா வழியில் நீங்கள் என்பதை உறுதி செய்யுங்கள். 91 ம் ஆண்டு நினைவு உள்ளதா..
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
25-ஜூன்-202014:04:19 IST Report Abuse
raja சாதாரண தெர்மல் ஸ்கேனர் விலை கூட தெரியாமல் தினமும் அறிக்கை கொடுக்கும் ஸ்டாலின் தானாகவே நாறி வருகிறார். அடக்கம் அமரரும் உய்க்கும் ....... என்ற வள்ளுவர் வார்த்தைக்கு ஏற்ப இல்லை எனில் வரும் தேர்தலில் திமுக சிதறுவதை தவிர்க்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X