பொது செய்தி

தமிழ்நாடு

ஆராபுரி ஏரியை ஆழப்படுத்தி துார் வார நடவடிக்கை தேவை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி 900 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆராபுரி ஏரியை ஆழப்படுத்தி துார்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் விருத்தாசலம் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆராபுரி ஏரி 900 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த ஏரியிலிருந்து வளையமாதேவி, மேல்வளையமாதேவி, தர்மநல்லுார், கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் நீர் ஆதாரமாக உள்ளது.ஏரி துார்வாராமல் கிடப்பதால் மண்துார்ந்து, புதர்கள் மண்டியதால் மழைகாலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாததால், விவசாய பணிகளை செய்ய முடியாமல் பலர் நிலங்களை தரிசாக வைத்துள்ளனர்.

ஏரியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணி என கூறி, கரையில் மட்டுமே சரி செய்துள்ளனர். ஏரியை ஆழப்படுத்தாததால், ஏரியின் ஆழம் குறையும் அபாயம் உள்ளது. விவசாயத்திற்கும், விவசாயிகளின் நீர் ஆதாரமாக உள்ள வளையமாதேவி ஆராபுரி ஏரியை துார்வார அரசும், மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி பணிகளை செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X