ஒரே நாளில், 15,968 பேருக்கு தொற்று| Dinamalar

ஒரே நாளில், 15,968 பேருக்கு தொற்று

Added : ஜூன் 24, 2020 | |
புதுடில்லி; கடந்த, 24 மணிநேரத்தில், 'கொரோனா' வைரசால், 15 ஆயிரத்து, 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே நாளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 24 மணிநேரத்தில், கொரோனா வைரசால், 15 ஆயிரத்து, 968 பேர்

புதுடில்லி; கடந்த, 24 மணிநேரத்தில், 'கொரோனா' வைரசால், 15 ஆயிரத்து, 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே நாளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 24 மணிநேரத்தில், கொரோனா வைரசால், 15 ஆயிரத்து, 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, நான்கு லட்சத்து, 56 ஆயிரத்து, 183 ஆக உயர்ந்து உள்ளது. இதில், ஒரு லட்சத்து, 83 ஆயிரத்து, 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு லட்சத்து, 58 ஆயிரத்து, 684 பேர், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, குணமடைந்தோரின் விகிதம், 56.71 சதவீதமாக உயர்ந்துள்ளது.கொரோனா வைரசால் கடந்த, 24 மணிநேரத்தில், 465 பேர் உயிரிழந்துள்ளனர்.



இதில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 248 பேர் பலியாகியுள்ளனர். டில்லியில், 68; தமிழகத்தில், 39; குஜராத்தில், 26; உத்தர பிரதேசத்தில், 19; மேற்கு வங்கத்தில், 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து, நாட்டில் வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 14 ஆயிரத்து, 476 ஆக உயர்ந்துள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், இரண்டு லட்சத்து, 15 ஆயிரத்து, 195 பேருக்கு கொரோனா வைரசுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதுவரை, 73 லட்சத்து, 52 ஆயிரத்து, 911 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X