கொரோனா தனிமை முகாமிற்கு வசதிகள்வணிகர் சங்க பேரமைப்பு வழங்கியது

Added : ஜூன் 24, 2020 | |
Advertisement
கடலுார் : கடலுாரில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டோர் தங்கும் முகாமிற்கு தேவையான படுக்கைகள், வெந்நீருடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வணிகர் சங்க பேரமைப்பு வழங்கியது. கொரோனா பாதிப்பு துவங்கியதில் இருந்து கடலுார் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தேவை மருத்துவ உபகரணங்கள், பணியாளர்களுக்கான பாதுகாப்பு உடை மற்றும் பொது மக்களுக்கு முகக்கவசங்கள், ஏழை, எளிய

கடலுார் : கடலுாரில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டோர் தங்கும் முகாமிற்கு தேவையான படுக்கைகள், வெந்நீருடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வணிகர் சங்க பேரமைப்பு வழங்கியது.

கொரோனா பாதிப்பு துவங்கியதில் இருந்து கடலுார் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தேவை மருத்துவ உபகரணங்கள், பணியாளர்களுக்கான பாதுகாப்பு உடை மற்றும் பொது மக்களுக்கு முகக்கவசங்கள், ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் என, கடலுார் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த சிறப்பு முகாம்களுக்கு தேவையான வசதிகளை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செய்து கொடுத்துள்ளது.

கடலுார் தேவனாம்பட்டினம் கல்லுாரியில் 200 பேர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள முகாமிற்கு தேவையான படுக்கைகள், தலையனைகள் மற்றும் வெந்நீருடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரனிடம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நகர தலைவர் துரைராஜ் வழங்கினார். சங்கத்தை சேர்ந்த சுமங்கலி அன்சாரி உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X