முன்னாள் முதல்வரிடம் சி.பி.ஐ., விசாரணை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 முன்னாள் முதல்வரிடம் சி.பி.ஐ., விசாரணை

புதுடில்லி; மணிப்பூர் காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான, இபோபி சிங்கிடம், நிதி முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

மணிப்பூர் மாநிலத்தில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், மாநிலத்திற்கான வளர்ச்சி நிதியில், 322 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான இபோபி சிங்கிடம், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.மணிப்பூர் மேம்பாட்டு சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான, நபகிஷோர் சிங், இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளார்.இவரும், முன்னாள் முதல்வரும், மணிப்பூர் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூரில், முதல்வர், என்.பிரேன் சிங் தலைமையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களில் ஒன்பது பேர், தங்கள் ஆதரவை திரும்ப பெற்று, கூட்டணி அரசு நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், கடந்த ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும், மோசடி மீதான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X