அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து ரத்து!

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (9+ 10)
Share
Advertisement
Coronavirus in tn, Tamil Nadu, suspend, intra-zone transport, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai,

சென்னை: சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களுக்கு இடையே நடந்து வந்த, பொது போக்குவரத்துக்கும், தனியார் வாகனங்களின் போக்குரவத்துக்கும், அரசு தடை விதித்துள்ளது. இன்று முதல், 30ம் தேதி வரை, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது.

‛இ -- பாஸ்' இருந்தால் மட்டுமே, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி வழங்கப்படும். நோய் தொற்று பரவலை தடுக்க, இந்த நடவடிக்கையை, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

தமிழகத்தில், கொரோனா நோய் பரவல், தினமும் அதிகரித்தபடி உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


ஆலோசனை



இந்நிலையில், சென்னை, தலைமை செயலகத்தில், ‛வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், கொரோனா நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்; எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட வாரியாக ஆலோசிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:தமிழகம் முழுவதும், வரும், 30ம் தேதி வரை, சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் மட்டும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அப்பகுதிகளில் வசிக்கும், அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், ரேஷனில், தலா, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட, அனைத்து ஊராட்சிகளிலும், சென்னையை போல், நேற்று அதிகாலை முதல், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


சிரமம்



அப்பகுதிகளிள் உள்ள, அரிசி கார்டுதாரர்கள் அனைவருக்கும், தலா, 1,000 ரூபாய் வழங்கப்படும். இப்பணத்தை, வரும், 27ம் தேதி முதல், சம்பந்தப்பட்ட துறையினர், வீடுகளுக்கு சென்று வழங்குவர்.
தற்போது, வாகன போக்குவரத்துக்கு, மண்டல முறை அமலில் உள்ளது. மண்டலங்களுக்குள், ஒரு மாவட்டத்திலிருந்து அடுத்த மாவட்டத்திற்கு, இ- - பாஸ் இல்லாமல் மக்கள் செல்கின்றனர். அவ்வாறு செல்வோருக்கு, நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது.
எனவே, இன்று முதல், 30ம் தேதி வரை, வாகன போக்குவரத்தில், மண்டல முறை, தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மாவட்டத்திற்குள் மட்டும், பயணம் செய்ய, இ- - பாஸ் தேவையில்லை.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ- - பாஸ் பெற வேண்டும். இக்காலத்தில், பொது பஸ் போக்குவரத்து, மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்துள்ளார்.


கணக்கெடுப்பு துவக்கம்!



தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஏப்ரலில், 2.01 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், வைரஸ் பரவல் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில பகுதிகளில், இம்மாதம், 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும், 21.83 லட்சம் கார்டுதாரர்களின் வீடுகளில், தலா, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், மதுரையில், மதுரை மாநகராட்சி எல்லை, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரக பகுதிகள், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில், நேற்று முதல், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.எனவே, அந்த இடங்களில் வசிக்கும் அரிசி கார்டுதாரர்களுக்கும், தலா, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அந்த இடங்களில், ரேஷன் அரிசி வாங்கும், எத்தனை கார்டுதாரர்கள் உள்ளனர் என்ற விபரத்தை, உணவு துறை சேகரித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
25-ஜூன்-202013:17:02 IST Report Abuse
Visu Iyer அப்போ ஏன் தடை படிப்படியாக நீக்கம் - தளர்வு என்று சொன்னாங்க...
Rate this:
Cancel
(Original) Nakkeran - Coimbatore,இந்தியா
25-ஜூன்-202012:11:55 IST Report Abuse
(Original) Nakkeran இன்னும் சில நாட்களுக்கு தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கை அமுல் படுத்த வேண்டும். இது மட்டுமே தீர்வு
Rate this:
Cancel
25-ஜூன்-202011:42:44 IST Report Abuse
ஆப்பு இனி வீட்டுக்குள்ளே ...இ-பாஸ் அவசியம்.
Rate this:
NATARAJAN - Coimbatore,இந்தியா
25-ஜூன்-202019:07:11 IST Report Abuse
NATARAJANஆம் புரியாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X